இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - அதிர்ச்சி சம்பவம்

வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - அதிர்ச்சி சம்பவம்
Published on

டெல்லி,

மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து தலைநகர் டெல்லிக்கு இன்று காலை இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் சுமார் 200 பேர் பயணித்தனர்.

இந்நிலையில், விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமான கட்டுப்பாட்டு அறைக்கு இமெயில் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, விமானம் டெல்லி விமானத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் டெல்லி விமான நிலையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com