மகா கும்பமேளாவில் புனித நீராடிய பூடான் மன்னர்

உ.பி. பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் இன்று புனித நீராடினார்.
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பூடான் மன்னர்
Published on

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.

இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது. இந்த கும்பமேளாவில் இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்டோர் வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

இந்நிலையில், பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் இன்று புனித நீராடினார். புனித நீராடுவதற்கு முன்பு சூரியனுக்கு 'அர்க்யா' சமர்ப்பித்தல் போன்ற சடங்குகளை செய்தார். அவருடன் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மந்திரிகள் சுதந்திர தேவ் சிங் மற்றும் நந்த கோபால் குப்தா ஆகியோரும் புனித நீராடினர்.

முன்னதாக, நேற்று பூடான் நாட்டிலிருந்து லக்னோ விமான நிலையத்துக்கு வருகை தந்த பூடான் அரசர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக்கை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மலர் கொத்து வழங்கி வரவேற்றார். பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன் பூடான் அரசருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com