ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம்... தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம்... தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் மணவெளி தேர்முட்டி வீதியை சேர்ந்தவர் முருகன். அவரது மனைவி ஜோதி. இவர்களது மகன் சத்தியபாபு (வயது 29). இவர் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்டார். கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சத்தியபாபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com