ரெயில் முன் பாய்ந்து சிறுமி உள்பட 2 பேர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

ஸ்ரீஜித்திற்கும் நடுவட்டம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ரெயில் முன் பாய்ந்து சிறுமி உள்பட 2 பேர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செருந்தனா பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித் (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே ஸ்ரீஜித்திற்கும் நடுவட்டம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிந்த ஸ்ரீஜித்தின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று கோர்ட்டில் விவாகரத்துகோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விவாகரத்து தொடர்பாக கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஸ்ரீஜித்தும் அவருடன் பழகி வந்த 17 வயது சிறுமியும் இன்று எக்ஸ்பிரஸ் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். கர்வட்டா பகுதியில் நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரெயில்முன் பாய்ந்து இருவரும் தற்கொலை செய்துகொண்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com