குஜராத்தில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு

குஜராத் மாநிலத்தில் ரிக்டர் 3.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
குஜராத்தில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு
Published on

காந்திநகர்,

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 4.37 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 23.60 டிகிரி வடக்கு அட்சரேகையிலும்,70.01 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

முன்னதாக, கடந்த 1ம் தேதி குஜராத்தின் கச்சு மாவட்டத்தில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. அதேபோல. கடந்த 2001 ஜனவரி 26ம் தேதி ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவான நிலநடுக்கத்தில் 13 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com