

புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலத்தில் சாலை வசதி பெற்ற கிராமங்கள் எத்தனை என்பது குறித்து சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ. தங்கர் திரிபாதி கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு சட்டசபையில் மாநில பஞ்சாயத்து ராஜ் மற்றும் குடிநீர் துறை மந்திரி ரபி நாராயன் நாயக் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார்.
அதில், ஒடிசாவில் 59 ஆயிரத்து 971 கிராமங்கள் உள்ளன. இதில், 51 ஆயிரத்து 671 கிராமங்கள் சாலை வசதி பெற்றுள்ளன. அதேவேளை, மாநிலத்தில் 8 ஆயிரத்து 300 கிராமங்கள் இதுவரை சாலைவசதி பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களுக்கு சாலை போக்குவரத்து கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.