சுப்ரீம் கோர்ட்டை பொதுமக்கள் சுற்றிப்பார்க்க அனுமதி

சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தை சனிக்கிழமைகளில் சுற்றிப்பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டை பொதுமக்கள் சுற்றிப்பார்க்க அனுமதி
Published on

புதுடெல்லி,

நாட்டின் குடிமக்கள் சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்றை தெரிந்து கொள்ளவும், அதன் செயல்பாட்டை நெருக்கமாக பார்க்கவும் வழிவகுக்கும் வகையில், சனிக்கிழமைகளில் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தை அதிகாரிகளின் உதவியோடு சுற்றிப்பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள், மற்றும் விடுமுறை நாட்கள் தவிர மற்ற சனிக்கிழமைகளில் பொதுமக்கள் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தை சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு https://guidedtour.sci.nic.in/ என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com