மும்பை விமான நிலையத்தில் ரூ.45 கோடி போதைப்பொருள், தங்கம் பறிமுதல்

கடத்தல் சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை விமான நிலையத்தில் ரூ.45 கோடி போதைப்பொருள், தங்கம் பறிமுதல்
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் 45 கோடி போதைப்பொருள், தங்கம் மற்றும் வைரங்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். 12 பேர் கைதாகினர். பாங்காக்கில் இருந்து பல்வேறு விமானங்களில் புளி பாக்கெட்டுகளுக்கு இடையில் மறைத்து கடத்தப்பட்ட 37 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாங்காக்கில் இருந்து வந்த 2 பயணிகளிடம் இருந்து கடத்தப்பட்ட 6 கோடி மதிப்புள்ள 6 கிலோ தங்கம், மற்றொரு நபரிடம் இருந்து 88 லட்சம் மதிப்புள்ள கடத்தல் வைரங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தல் வலையமைப்புகள் குறித்து கண்டறிய சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com