மணல் லாரி கவிழ்ந்து விபத்து: குழந்தை உள்பட 4 பேர் பலி

கிரேன் உதவியுடன் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அவர்களின் நசுங்கிய உடலை மீட்டனர்.
மணல் லாரி கவிழ்ந்து விபத்து: குழந்தை உள்பட 4 பேர் பலி
Published on

காந்திநகர்,

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்திற்கு மணல் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி குறுகிய பாதை வழியாகச் செல்ல முயன்றபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலை அருகில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு குழந்தை உள்பட 3 பெண்கள் மீது மணல் லாரி சரிந்து விழுந்தது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் கிரேன் உதவியுடன் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அவர்களின் நசுங்கிய உடலை மீட்டனர்.

இந்த விபத்தில் ரேணுகாபென் கனவா ( வயது 24), சோனல்பென் நினாமா (22), இலபென் பபோர் (40) மற்றும் ருத்ரா (2) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடலானது அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com