தீராத வயிற்று வலியால் அவதி... இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தீராத வயிற்று வலியால் அவதி... இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா வீரகவுடனஉண்டி கிராமத்தை சேர்ந்தவர் சித்தராஜு. இவரது மனைவி வினோதா (வயது 25). இவர் கடந்த 2 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் வினோதா மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வினோதா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் நஞ்சன்கூடு புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் வினோதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வினோதா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து நஞ்சன்கூடு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com