கல்வி நிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு: நாளை விசாரணை

தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தினால்தான் அந்த நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது.
கல்வி நிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு: நாளை விசாரணை
Published on

புதுடெல்லி,

தமிழ்நாட்டுக்கு, கடந்த கல்வி ஆண்டுக்கான (2024-25) 'சமக்ரா சிக்சா' திட்டத்தின்கீழ் தர வேண்டிய ரூ.2,291 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. மும்மொழி சார்ந்த தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தினால்தான் அந்த நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இதனையடுத்து கல்வி நிதி ரூ.2,291 கோடியை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி. ஆர். கவாய் தலைமையிலான அமர்வு நாளை (வெள்ளிக்கிழமை) விசாரிக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com