தமிழ்புத்தாண்டு: பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

புத்தாண்டு வளத்தையும் ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும் என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
தமிழ்புத்தாண்டு: பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து
Published on

புதுடெல்லி,

சித்திரை மாத பிறப்பை ஒட்டி, தமிழகத்தில் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாள், புத்தாண்டை ஒட்டி, ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நம் நாட்டின் பாரம்பரியம், கலாசாரத்தை பிரதிபலிக்கும் இந்த பண்டிகைகளை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அனைவரின் பசி போக்கும் உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் இந்த பண்டிகைகள், இயற்கை மற்றும் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு இந்த பண்டிகைகள் மிகச் சிறந்த ஊக்கமளிக்கட்டும் என வாழ்த்துவதாக" ஜனாதிபதி முர்மு தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழில் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: - இந்த புத்தாண்டு வளத்தையும் ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும்" என்று பதிவிட்டுள்ளார். ஆங்கிலத்திலும் பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியை குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com