தொண்டையில் வாழைப்பழம் சிக்கி தொழிலாளி பலியான சோகம்

சாலையோர உணவகத்தில் ஆம்லேட் உடன் வாழைப்பழத்தை முழுமையாக சாப்பிட்டு உள்ளார்
தொண்டையில் வாழைப்பழம் சிக்கி தொழிலாளி பலியான சோகம்
Published on

காசர்கோடு,

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பெந்தியடக்கா அருகே பாருடக்கா பகுதியை சேர்ந்தவர் விஷாந்த் டிசோசா (வயது 52), தொழிலாளி. இவர் சாலையோர உணவகத்தில் ஆம்லேட் உடன் வாழைப்பழத்தை முழுமையாக சாப்பிட்டு உள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு காசர்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி விஷாந்த் டிசோசா இறந்தார். அவரது தொண்டையில் ஆம்லேட், வாழைப்பழம் சிக்கியதால் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பெந்தியடக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com