உத்தர பிரதேசம்: சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட மகா கும்பமேளா புனித நீரில் கைதிகள் குளியல்

சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட மகா கும்பமேளா புனித நீரில் கைதிகள் குளித்து மகிழ்ந்தனர்.
உத்தர பிரதேசம்: சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட மகா கும்பமேளா புனித நீரில் கைதிகள் குளியல்
Published on

லக்னோ,

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமாக மகா கும்பமேளா திகழ்கிறது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் மாவட்ட சிறைச்சாலை நிர்வாகத்தினர், மகா கும்பமேளாவில் சிறை கைதிகளும் புனித நீராடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

இதன்படி மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் சிறை வளாகத்திற்குள் உள்ள ஒரு தொட்டியில் நிரப்பப்பட்டது. அந்த நீரில் சிறைக் கைதிகள் குளித்து மகிழ்ந்தனர். மகா கும்பமேளாவில் தாங்களும் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கிய சிறை நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிப்பதாக அவர்கள் கூறினர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com