மேற்கு வங்க கவர்னருக்கு திடீர் நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி

கவர்னர் ஆனந்த் போசின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
மேற்கு வங்க கவர்னருக்கு திடீர் நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி
Published on

முர்ஷிதாபாத்,

மேற்கு வங்காள மாநில கவர்னர் சிவி ஆனந்த் போஸ்க்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். உரிய பரிசோதனைகளுக்கு பின்னர், அடுத்தக்கட்ட சிகிச்சை தொடங்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கவர்னரின் உடல்நிலை பற்றிய தகவலறிந்த மம்தா பானர்ஜி, உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார்.அங்கு அவரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். கவர்னரின் உடல் நிலை குறித்து தற்போது வரை கவர்னர் மாளிகை எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. எனினும், அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com