

புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலம் மயூர்பாஜி மாவட்டம் பங்கிரிபொசி பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை (வயது 22) அவருக்கு தெரிந்த 2 இளைஞர்கள் நேற்று காரில் அழைத்து சென்றுள்ளனர்.
வேலை தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும் எனக்கூறி இளம்பெண்ணை அழைத்து சென்றுள்ளனர். செல்லும் வழியில் அதே காரில் மேலும் 3 இளைஞர்கள் ஏறியுள்ளனர்.
இந்நிலையில், பங்கிரிபொசி பகுதியில் இருந்து 80 கிலோ மீட்டர் த்லைவில் பலசொரி பகுதிக்கு கார் சென்றுள்ளது. அங்கு ஆள் நடமாட்டமற்ற பகுதியில் வைத்து இளம்பெண்ணை 5 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர், இளம்பெண்ணை காரில் இருந்து சாலையோரம் வீசிச்சென்றுள்ளனர். தனக்கு நடந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 இளைஞர்களை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள எஞ்சிய 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.