தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 76 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 18.6.2025 அன்று கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான தூத்துக்குடி, நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் முருகன்(எ) டீயோ முருகன் (வயது 27), ரஹமதுல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் மகன் கோவிந்தராஜன்(எ) கோபி(23) மற்றும் பூபாண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் சடமாரியப்பன்(23) ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் இன்று (18.7.2025) வடபாகம் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு இதுவரை 76 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com