அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் காலமானார்

கோகுல இந்திராவின் கணவர் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மரணடைந்தார். இந்த நிலையில் அவரது மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான S. கோகுல இந்திரா அவர்களுடைய கணவர் A.R. சந்திரசேகர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

பாசமிகு கணவரை இழந்து மிகுந்த வேதனையில் வாடும் அன்புச் சகோதரி கோகுல இந்திராவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், சந்திரசேகருடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com