சட்டசபை 4வது நாள் கூட்டம் தொடங்கியது

இன்று 4வது நாள் சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது
சட்டசபை 4வது நாள் கூட்டம் தொடங்கியது
Published on

சென்னை,

நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர் .

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் சட்டசபையில் நேற்று எதிரொலித்தது . அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் சம்பவம் சிறப்பு கவன தீர்ப்பு தீர்மானமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.சட்டசபையில் அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக விவாதம் நடந்தது. விவாதத்திற்கு பதிலளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்த நிலையில், இன்று 4வது நாள் சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் இன்றும் கருப்பு சட்டை அணிந்தபடி கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com