உரிமைகளை வென்றெடுக்கும் தீரர்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே தி.மு.க. கூட்டணி கட்சியினர் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உரிமைகளை வென்றெடுக்கும் தீரர்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
Published on

சென்னை,

மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் தான் தமிழகத்திற்கு நிதி தருவோம் என்று மத்திய மந்திரி கூறியதற்கு தி.மு.க. மட்டுமின்றி கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் மத்திய பட்ஜெட், மும்மொழி கொள்கை, யு.ஜி.சி. விதி என எல்லாவற்றிலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதாகவும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் தெரிவித்து வந்தன. 

இந்நிலையில் தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மாலை தி.மு.க. கூட்டணி கட்சியினர் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதில் தி.மு.க., காங்கிரஸ், தி.க.., வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. மேலும் முஸ்லீம் லீக், ம.நீ.ம., ம.ம.க., கொ.ம.தே.க., த.வா.க. உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் உரிமைகளைச் சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய பா.ஜ.க. அரசு எடுத்து வருவதாக கூறி கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை டேக் செய்து, உரிமைகளை வென்றெடுக்கும் தீரர்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com