மனைவி இல்லாமல் தவிப்பு...இளம்பெண்ணிடம் அத்துமீறிய கார் டிரைவர்

மோட்டார் சைக்களில் வந்த அடையாளம் தெரியாத வாலிபர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
மனைவி இல்லாமல் தவிப்பு...இளம்பெண்ணிடம் அத்துமீறிய கார் டிரைவர்
Published on

சென்னை,

சென்னை வேளச்சேரியில் உள்ள வணிக வளாகத்தில் 30 வயதான இளம்பெண்ணி ஒருவர் அழகு கலை நிபுணராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு இவர் பணியை முடித்துவிட்டு வேளச்சேரி சாலையில் உள்ள கடையில் இட்லி மாவு வாங்கி விட்டு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்களில் வந்த அடையாளம் தெரியாத வாலிபர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் இது குறித்து வேளச்சேரி போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அதே பகுதியில் உள்ள 70 கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து கிண்டியை சேர்ந்த வினோத் (வயது 28) என்பவர்தான் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

விசாரணையில் வினோத் கார் டிரைவர் என்பதும் மனைவி, குழந்தைகள் வெளியூர் சென்று இருந்ததால் கடந்த ஒரு மாதமாக மனைவி இல்லாததால் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாமல் தவியாய் தவித்து வந்ததும் அதன் காரணமாகவே மதுபோதையில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com