உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சர்ச்சை கருத்து; பாஜக நிர்வாகி மீதான வழக்கு ரத்து

டெல்லியை சேர்ந்த பாஜக நிர்வாகி அமித் மாளவியா எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சர்ச்சை கருத்து; பாஜக நிர்வாகி மீதான வழக்கு ரத்து
Published on

மதுரை

கடந்த 2023-ம் ஆண்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் தற்போதைய துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அதில் அவர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டெல்லியை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகி அமித் மாளவியா என்பவர் எக்ஸ் தளத்தில் முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் ஆகியோரின் படங்களை பதிவிட்டு, சில சர்ச்சை கருத்து தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது.

எனவே அவர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. வக்கீல் அணி நிர்வாகி தினகரன், திருச்சி போலீசில் புகார் செய்தார்.அந்த புகாரின்பேரில் பல்வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் அமித் மாளவியா மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அவர், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், அமித் மாளவியா மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com