சென்னை: நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

சென்னை கொடுங்கையூரில் நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை: நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

சென்னை கொடுங்கையூர் நாராயணசாமி கார்டன் ஸ்ரீவாரியார் நகரை சேர்ந்தவர் ஹரிஷ்குமார். இவர் சென்னையில் உள்ள தனியார் அலுவலகத்தில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜீவரேகா. இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் உண்டு.

மூத்த மகள் வெளிநாட்டில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். இரண்டாவது மகள் மதனஸ்ரீ (17 வயது). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு நீட் தேர்வு எழுதி இருந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் மதனஸ்ரீ தோல்வியடைந்ததாக தெரிகிறது.

இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்த அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முதல் மாடியில் உள்ள தனி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மதனஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com