“ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா

சீனா தனது சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கத் தேவையானதைச் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா
Published on

பீஜிங்,

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு நிதியுதவி செய்வதில் இந்தியாவும், சீனாவும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று கூறினார். இந்நிலையில் அவரது விமர்சனத்தை சீனா நிராகரித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறுகையில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட பெரும்பாலான நாடுகள் ரஷியாவுடன் வர்த்தகம் செய்து வருகின்றன. சீன நிறுவனங்களுக்கும், ரஷிய நிறுவனங்களுக்கும் இடையிலான இயல்பான பரிமாற்றங்களும், ஒத்துழைப்பும் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைப்படி நடக்கின்றன. அந்த நிறுவனங்கள் எந்த மூன்றாம் நாட்டையும் குறிவைத்து செயல்படவில்லை. ஆகவே, ரஷியாவுடனான சீன நிறுவனங்களின் வர்த்தகத்தை எவ்விதத்திலும் தடுக்கக்கூடாது. அப்படி தடுத்தால், எங்கள் சட்டப்பூர்வ உரிமைகளை பாதுகாக்க எதிர் நடவடிக்கைகளை எடுப்போம். உக்ரைன் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதுதான் சீனாவின் நிலைப்பாடு என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com