

ஆறுமுகநேரி,
சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்தவர் ஆரிப். இவர் தங்க நகைகள் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது சகோதரர் செய்யது முகைதீன் நெல்லை டவுனில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஆரீப், சகோதரர் செய்யது முகைதீனுக்கு கொடுப்பதற்காக கடந்த 8-ந்தேதி இரவில் 49 பவுன் நகைகள் அடங்கிய பையை சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து உடன்குடி செல்லும் ஆம்னி பஸ்சில் டிரைவராக இருந்த தட்டார்மடம் பகுதியை சேர்ந்த சிவபாலன் என்பவரிடம் கொடுத்துள்ளார்.
பஸ்சில் கிளினீனராக வீரபாண்டியன்பட்டணம் சண்முகபுரம் கிங்ஸ் காலனியை சேர்ந்த மகேஷ் (வயது 30) இருந்துள்ளார். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சாகுபுரத்திற்கு பஸ் வந்தபோது, கிளீனர் மகேஷ், 49 பவுன் நகை பார்சல் இருந்த பையை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் நேற்று அதிகாலையில் மகேஷை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து 23 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.