கோவை:நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்

போலீசார் சுட்டுப் பிடிக்க முயன்றதில் காயமடைந்த ரவுடி ஹரிஸ்ரீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கோவை:

கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை சேர்ந்தவர் ரவுடி ஹரிஸ்ரீ. இவருக்கு சக்திவேல் என்பவருடன் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஹரிஸ்ரீ சட்டவிரோதமாக தன்னிடம் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வந்து மேலே சுட்டு மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து சக்திவேல் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் ஹரிஸ்ரீயிடம் போலீசார் விசாரணை செய்ய சென்றனர். அப்போது அங்கிருந்து தப்பிக்க தனது துப்பாக்கியால் போலீசாரை சுட முயன்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்காப்புக்காக போலீசார் ஹரிஸ்ரீ மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் சுட்டுப் பிடிக்க முயன்றதில் காயமடைந்த ரவுடி ஹரிஸ்ரீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சூலூர் அடுத்த அரசூர் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து எஸ்பி கார்த்திகேயன் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com