தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: தமிழக மக்களை குழப்புவதே திமுகவின் நோக்கம் - அண்ணாமலை

தொகுதி மறுசீரமைப்பு குறித்து திமுகவினர் புரளி பரப்புவதாக அண்ணாமலை கூறினார்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: தமிழக மக்களை குழப்புவதே திமுகவின் நோக்கம் - அண்ணாமலை
Published on

சென்னை,

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்க வருகிற 5-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. அனைத்துக்கட்சி கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக மேலும் பேசியதாவது;

தொகுதி மறுசீரமைப்பு குறித்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது. தொகுதி மறுவரையினால் எந்த மாநிலங்களும் பாதிக்கப்படாது என்று உள்துறை மந்திரி அமித்ஷா தெளிவுபடுத்திவிட்டார். தெளிவான விளக்கத்திற்கு பிறகும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவது ஏற்புடையதல்ல.

தொகுதி மறுசீரமைப்பு குறித்து புரளி பரப்புகின்றனர். தமிழக மக்களை குழப்புவதே திமுகவின் நோக்கம். கற்பனையான அச்சங்களை பரப்பவும், பொய் சொல்லவுமே அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு முதல்வர் ஏற்பாடு செய்துள்ளார்."

இவ்வாறு அவர் பேசினார்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com