2026 தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் - திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்பது தெரியவில்லை என திருமாவளவன் கூறினார்.
2026 தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் - திருமாவளவன்
Published on

திருச்சி,

விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

"2026ஆம் ஆண்டு தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணிதான் கூட்டணி என்கிற வடிவத்தோடு இருக்கிறது. அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்பது தெரியவில்லை. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்து எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் ஜனாதிபதியை பாஜக அரசு செயல்பட வைக்கிறது."

இவ்வாறு அவர் பேசினார்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com