அதிமுக-பாஜக கூட்டணி குறித்து குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் - செல்லூர் ராஜு

கூட்டணி குறித்தும் எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறியுள்ளதாக செல்லூர் ராஜு தெரிவித்தார்.
அதிமுக-பாஜக கூட்டணி குறித்து குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் - செல்லூர் ராஜு
Published on

மதுரை,

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

"கூட்டணி ஆட்சியா? அ.தி.மு.க. ஆட்சியா? என்பது குறித்து எங்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் பேசியதும், தேர்தல் கூட்டணி குறித்தும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறியுள்ளார். ஒரு முன்னாள் முதல்வரை தரக்குறைவாகவும், அதனை கேட்பவரின் காதுகள் கூசும் அளவிற்கு முதல்வர் பேசியிருக்கிறார். இந்த போக்கை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். எடப்பாடி மீது நாளுக்கு நாள் புகழும், செல்வாக்கும் அதிகரிப்பதால் முதல்வர் ஸ்டாலின் இதுபோன்று பேசி வருகிறார்.

மதுரையே அழகாக காட்சியளிக்க காரணம் அ.தி.மு.க. ஆட்சியின் பல்வேறு திட்டங்களும், 8,000 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்ததால் தான். அரசர் காலத்திற்குப் பிறகு அம்மாவின் ஆட்சியில் தான் எடப்பாடி பழனிசாமி குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தார். அ.தி.மு.க. ஆட்சியில் நாங்கள் என்ன செய்தோம் என்பது மக்களுக்கு தெரியும். மேலும், மத்திய அரசின் திட்டங்களுக்கு தான் தி.மு.க. அரசு தனது ஸ்டிக்கரை ஒட்டுகிறது." இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com