சென்னையில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் குடிநீர் ஏடிஎம்கள்

இந்த குடிநீர் ஏடிஎம்கள் மூலம் பலரும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் குடிநீர் ஏடிஎம்கள்
Published on

சென்னை,

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் முதல் கட்டமாக 50 குடிநீர் ஏடிஎம்கள் தொடங்க உள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்கிறார்.

இதில் 150 மில்லி லிட்டர் மற்றும் 1 லிட்டர் என்று இரண்டு வகைகளில் குடிநீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வாட்டர் பாட்டில்களில் தண்ணீரை பிடித்துப் பருகும் வகையில் இந்த ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் ஏடிஎம்கள் மூலம் பலரும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com