ஈரோடு: சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு: சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 31). தொழிலாளி. இவர் நம்பியூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துவதாக நம்பியூர் ஊராட்சி ஒன்றிய ஊர்நல அலுவலர் ராஜேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து அவர் கோபி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் விக்னேஷ் 17 வயது சிறுமியை திருமணம் செய்ததும், தற்போது சிறுமி 2 மாத கர்ப்பிணியாக இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் விக்னேஷை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com