கடலில் விழுந்து மீனவர் உயிரிழப்பு; குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

உயிரிழந்த மீனவர் மந்திரமூர்த்தியின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடலில் விழுந்து மீனவர் உயிரிழப்பு; குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Published on

சென்னை,

மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

"புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், கோட்டைப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடந்த 30.6.2025 அன்று நான்கு நபர்களுடன் IND-TN-08-MM-183 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் கடலுக்குள் 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடிக்கச் சென்ற மணமேல்குடி வட்டம், கோட்டைப்பட்டினம், கொடிகுளம் கிராமம், ராமநகரைச் சேர்ந்த மந்திரமூர்த்தி (வயது 30) த/பெ.பாண்டி என்பவர் எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவர் மந்திரமூர்த்தியின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com