நம்மைவிட கவர்னர் நன்றாக அரசியல் செய்கிறார் - உதயநிதி ஸ்டாலின்

கவர்னருக்கு வரிந்து கட்டிக்கொண்டு பேசும் இயக்கமாக அதிமுக இருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
நம்மைவிட கவர்னர் நன்றாக அரசியல் செய்கிறார் - உதயநிதி ஸ்டாலின்
Published on

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5,000 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, 48 கழகத் தோழர்களுக்கு கலைஞர் நூற்றாண்டு நாணயம், பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை, 200 கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, 200 விளையாட்டு குழுக்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், கழகத் தொண்டர் அணியினருக்கு வீட்டு மனைப்பட்டாக்கள் உள்ளிட்ட நலத்திட்டங்களை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

அதன்பின்னர் விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

நாம் அரசியல் செய்கிறோமோ இல்லையோ கவர்னர் ஆர்.என்.ரவி நன்றாக அரசியல் செய்கிறார். கவர்னர் சட்டசபையில் வாக்கிங் செல்கிறார்; அவர் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை. சட்டசபையில் அரசு தரப்பில் தந்த உரையை புறக்கணித்து சென்ற கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து எடப்பாடி பழனிசாமி கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. கவர்னருக்கு வரிந்து கட்டிக்கொண்டு பேசும் இயக்கமாக தான் அதிமுக இருக்கிறது.

2024-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பிரதமர் மோடி பல வித்தைகளை செய்து பார்த்தார். எனினும், ஒரு தொகுதியில் கூட பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை. 2026 தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி சேர்ந்து ஒன்றாக வருவார்கள்; அவர்களை விரட்டுவது சுலபம்; சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் '11 தோல்வி' என எடப்பாடி பழனிசாமி அழைக்கப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com