சென்னை நகரின் பல பகுதிகளில் கனமழை

பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
சென்னை நகரின் பல பகுதிகளில் கனமழை
Published on

சென்னை,

மேற்கு திசையில் இருந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை நோக்கி வீசும், காற்றின் வேகத்தில் மாறுபாடு காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்தநிலையில் சென்னை நகரின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

அந்தவகையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், கோயம்பேடு, திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், மாம்பலம், கிண்டி,ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி,போரூர், கொரட்டூர், கே.கே.நகர், வளசரவாக்கம், தி.நகர், நங்கநல்லூர், மாதவரம், மூலக்கடை, உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை புறநகர் பகுதியான பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பூந்தமல்லி, குமணன்சாவடி, கரையான்சாவடி, செம்பரம்பாக்கம், காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com