புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நாளை திருவிழா நடைபெற உள்ளது. இந்த நிலையில், முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அருணா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வருகிற சனிக்கிழமை (15-ம் தேதி) பணி நாள் என்றும், சனிக்கிழமையை பணி நாளாக கொண்டுள்ள நிறுவனங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (16-ம் தேதி) பணிநாள் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com