காதல் விவகாரம்: நெல்லையில் வாலிபர் வெட்டிக்கொலை

வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் விவகாரம்: நெல்லையில் வாலிபர் வெட்டிக்கொலை
Published on

நெல்லை,

திருநெல்வேலி மாவட்டம் கே.டி.சி., நகரில் இன்று காலை வாலிபர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். விசாரணையில், கொல்லப்பட்டவர் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன் கவின்குமார்(28) என்பதும், சென்னையில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றியதும் தெரியவந்துள்ளது.

இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததும், இந்த விவகாரத்தில் அவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை போலீசார் கவின்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். காதல் விவகாரத்தில் நடந்த கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com