ஒரு கவுன்சிலர் கூட ஆகல.... விஜய்க்கு நயினார் நாகேந்திரன் பதிலடி

த.வெ.க. மாநாடு மதுரையில் சமீபத்தில் நடைபெற்றது
ஒரு கவுன்சிலர் கூட ஆகல.... விஜய்க்கு நயினார் நாகேந்திரன் பதிலடி
Published on

மதுரை,

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் வாகை சூடும் வரலாறு திரும்புகிறது வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்துடன் த.வெ.க. 2ம் மாநில மாநாடு மதுரையில் சமீபத்தில் நடைபெற்றது .இதில் பாஜகவை விஜய் கடுமையாக விமர்சித்து இருந்தார் .

மேலும் விரைவில் த.வெ.க. தலைவர் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது,

யாருடைய சுற்றுப் பயணமும் தேசிய ஜனநாயக கூட்டணியை ஒன்றும் செய்ய முடியாது.ஒரு கவுன்சிலர் கூட ஆகல.., ஒரு எம்.எல்.ஏ. கூட ஆகல.., அவரை தோற்கடித்து விடுவேன்; இவர் எனக்கு எதிரி' என கூறுவது பக்குவமில்லாத வார்த்தையாகத்தான் கருதப்படும்.என தெரிவித்தார் . 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com