23-ந்தேதி வரை பொறுத்திருக்க கூறிய ஓ.பன்னீர்செல்வம் - எதற்காக...?

செங்கோட்டையன் என்னிடம் பேசவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
23-ந்தேதி வரை பொறுத்திருக்க கூறிய ஓ.பன்னீர்செல்வம் - எதற்காக...?
Published on

மதுரை,

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஈரோட்டில் தமிழக வெற்றிக்கழக பொதுக்கூட்டம் நடக்கிறது. செங்கோட்டையன், த.வெ.க.வுக்கு சென்றதில் இருந்து அவர் என்னிடம் பேசவில்லை. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க 23-ந்தேதி என் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதுவரை நீங்கள் பொறுத்து இருக்க வேண்டும. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, உங்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர்தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர இருப்பதாக டி.டி.வி. தினகரன் கூறியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, என்னிடம் அவர் அது பற்றி கூறவில்லை என கூறிவிட்டு ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து சென்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com