நீதிமன்ற நேரம் வீணாகும் வகையில் பொதுநல வழக்கு; ரூ.1 லட்சம் அபராதம் விதித்த சென்னை ஐகோர்ட்டு

வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என கூறி அதனை தள்ளுபடி செய்தது.
நீதிமன்ற நேரம் வீணாகும் வகையில் பொதுநல வழக்கு; ரூ.1 லட்சம் அபராதம் விதித்த சென்னை ஐகோர்ட்டு
Published on

சென்னை,

திருவள்ளூர் கோலப்பன் சேரியில் விதிகளை மீறி பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்து, இதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

இதேபோன்று நீதிமன்ற நேரம் வீணாகும் வகையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு, உத்தரவிட்டுள்ளது. மேலும், முறையான ஆய்வுகளை மேற்கொண்ட பின், பொதுநல வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறி ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com