மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

இரும்புக்குழாயினை எடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் கலியபெருமாள் உயிரிழந்தார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், கீழத்தாழனூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவர் நேற்று (14.9.2025) பிற்பகல் சுமார் 2 மணியளவில் கீழத்தாழனூர் கிராமத்தில் இரும்புக்குழாயினை எடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக உயர்மின் அழுத்த மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த கலியபெருமாளின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com