சிவகங்கை: தனியார் பள்ளி மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி

ஸ்பெஷல் கிளாஸ் என்ற பெயரில் வைத்து மாணவிகளுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை: தனியார் பள்ளி மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி
Published on

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் அமைந்துள்ள குட்வில் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி இன்று காலையில் 7. 30 பள்ளிக்கு வந்த மாணவி சுமார் ஒரு எட்டு மணி அளவில் வகுப்பறை நடந்து கொண்டிருந்தத போது அப்பொழுது பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மாணவி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.

ஒன்பது மணிக்கு திறக்க வேண்டிய பள்ளியை 7:30 மணிக்கு திறப்பது மற்றும் மாணவிகளுக்கு அதிக பணிச்சுமையை கொடுப்பது காரணமாக இருக்குமா? தற்போது தான் பள்ளி திறந்து உள்ளது திறந்த உடனே ஸ்பெஷல் கிளாஸ் என்ற பெயரில் தனியார் பள்ளிகள் மாணவிகளுக்கு அதிகமாக சுமையை கொடுப்பதனால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்குமா? வேறேனும் வீட்டில் பிரச்சனை எதுவும் நடந்திருக்குமா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இருப்பினும் தனியார் பள்ளிகளில் அதிகாலைகளையே மாணவிகளுக்கு ஸ்பெஷல் கிளாஸ் என்ற பெயரில் வைத்து மாணவிகளுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com