தஞ்சை: நாட்டு வெடி குடோனில் விபத்து - இருவர் பலி

முதற்கட்ட விசாரணையில் வெடி குடோன் அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.
தஞ்சை: நாட்டு வெடி குடோனில் விபத்து - இருவர் பலி
Published on

தஞ்சை,

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பாதி பகுதியில் முறையான அனுமதி இன்றி வெடி குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நாட்டு வெடி குடோனில் பலர் வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று இந்த குடோனில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் ரியாஸ் (வயது 18) உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் வெடி குடோன் அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com