தூத்துக்குடி: கொலை வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் தங்கராஜா(எ) ராஜா முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி: கொலை வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் வைத்து கடந்த 21.4.2025 அன்று திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் தங்கராஜா(எ) ராஜா (வயது 28) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட, தூத்துக்குடி எஸ்.எஸ். மாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான மரியசூசை ஸ்டாலின் மகன் சிலுவைஆகாஷ்(எ) ஆகாஷ்(24), தாசன் மகன் நக்சன்(20), லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த ஸ்டீபன் மகன் மரியதாமஸ் டினோ(எ) டினோ(24), கீழ அலங்காரதட்டு பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் மைக்கேல் ஜோவின்(எ) ஜோவின்(19) ஆகிய 4 பேரை, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் நேற்று (22.5.2025) வடபாகம் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com