தூத்துக்குடி: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை- நீதிபதி தீர்ப்பு

தூத்துக்குடியில் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுரேஷ் தீர்ப்பு வழங்கினார்.
தூத்துக்குடி: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை- நீதிபதி தீர்ப்பு
Published on

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆழ்வார்திருநகரி செம்பூர் பகுதியைச் சேர்ந்த உதயசிங் மகன் மாரி(எ) மாரிமுத்து (வயது 29) என்பவரை ஆழ்வார்திருநகரி காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் நேற்று (04.04.2025) தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றவாளியான மாரி(எ) மாரிமுத்துவுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய ஆழ்வார்திருநகரி இன்ஸ்பெக்டர் லெட்சுமிபிரபா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் பூர்ணகலா ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com