தூத்துக்குடி: கோவிலில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடியில் சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதிகளுக்கு சொந்தமான ஸ்ரீதர்மகுட்டி சாஸ்தா அய்யனார் பேச்சியம்மாள் கோயில் ஜார்ஜ் சாலையில் உள்ளது.
தூத்துக்குடி: கோவிலில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

தூத்துக்குடி, சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மனைவி சாந்தா. முருகேசன் இருசக்கர வாகனம் பழுதுபாக்கும் தொழில் செய்து வருகிறா. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். தூத்துக்குடி, ஜார்ஜ் சாலையில் இவர்களுக்கு சொந்தமான ஸ்ரீதர்மகுட்டி சாஸ்தா அய்யனார் பேச்சியம்மாள் கோயில் உள்ளது.

சென்னையில் வேலை பார்க்கும் இவரது மூத்த மகன் அங்கு ஒரு பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. மகனின் காதல் விவகாரம் தொடாபாக தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சாந்தா, நேற்று தங்கள் கோயிலுக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டா. இச்சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com