சற்று குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?

நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தங்கம் விலை இந்த மாதத்தில் கடந்த 5-ந்தேதி வரை உயர்ந்து, மறுநாளில் இருந்து 9-ந்தேதி வரை குறைந்திருந்தது. பின்னர் மீண்டும் அதிகரித்து, அதற்கு அடுத்த நாளே குறைந்தது. இப்படியாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை கடந்த 14-ந்தேதி ஒரே நாளில் காலை மற்றும் பிற்பகல் என 2 முறை ஏற்றம் கண்டது.

ஒரே நாளில் கிராமுக்கு ரூ.180-ம், சவரனுக்கு ரூ.1,440-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8,300-க்கும், ஒரு சவரன் ரூ.66,400-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டிப்பிடித்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து சற்று ஆறுதல் அளித்தது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.65,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.8,210-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் ரூ.113-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com