வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் இன்று அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on

திண்டுக்கல்,

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் இன்று வாரவிடுமுறை என்பதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

வனப்பகுதியில் உள்ள குணா குகை, பில்லர் ராக், பைன்மரக் காடு, மோயர் பாயிண்ட், பசுமை பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி, மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட பகுதிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள், அங்கு நிலவிய சீதோஷ்ண நிலையை அனுபவித்து மகிழ்ந்தனர்.

இதேபோல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்தும் உற்சாகம் அடைந்தனர். மேலும் பிரையண்ட் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள், அங்குள்ள புல்தரைகளில் அமர்ந்து குடும்பத்தினருடன் செல்பி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். அதே சமயம், ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கொடைக்கானல் செல்லும் சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com