மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 35 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 35 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
Published on

சேலம்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந்தேதி தொடங்கி பல்வேறு நகரங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் விரைவாக நிரம்பி வருகின்றன. காவிரியில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, சேலம் மேட்டூர் அணையில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, டெல்டா பாசனத்திற்கு 22 ஆயிரம் கன அடியும்,16 கண் மதகுகள் வழியாக 12,500 கன அடியும், கால்வாய்கள் வழியே 500 கன அடி நீரும் என மொத்தம் 35 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது.

மேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கேற்ப திருச்சி முக்கொம்பு மேலணைக்கு நீர் திறப்பு அளவும் இருக்கும் என நீர்வளத்துறை தெரிவித்து உள்ளது. தற்போது மேலணைக்கு நீர் வரத்து 14 ஆயிரம் கன அடியாக உள்ளது. மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com