அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து செங்கோட்டையன் கூறியது என்ன.?

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து செங்கோட்டையன் கூறியது என்ன.?
Published on

கோவை,

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பும் வைத்துக்கொண்டது உள்ளிட்ட காரணங்களால் செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அறிக்கை மூலம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கோள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து செங்கோட்டையன் கூறியதாவது:

என்னை கட்சியில் இருந்து நீக்கியது குறித்து நாளை விரிவாக விளக்கம் அளிக்கிறேன். நாளை காலை 11 மணிக்கு தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து விரிவாக பேசுகிறேன். என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com