தமிழகத்தில் இரவு 10 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com